“இப்ப வாடா… வந்து பாரு..!” சண்டை போட ஆள் வேணுமா..? வாடகைக்குக் கிடைக்கும் விசித்திர சண்டைக்காரர்.. இணையத்தில் செம வைரலாகும் பிசினஸ் ஐடியா..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இப்ப வாடா… வந்து பாரு..!” சண்டை போட ஆள் வேணுமா..? வாடகைக்குக் கிடைக்கும் விசித்திர சண்டைக்காரர்.. இணையத்தில் செம வைரலாகும் பிசினஸ் ஐடியா..!!

Published

on

சீனாவின் குவாங்சோ நகரைச் சேர்ந்த நபர் ஒருவர், தங்களுக்குப் பதிலாக மற்றவர்களிடம் சண்டை போடுவதையே தனது முழுநேரத் தொழிலாக மாற்றி ஆச்சரியப்படுத்தியுள்ளார். நேரில் அல்லது போன் மூலம் வாடிக்கையாளர்களுக்காகப் பேசுவதற்கும், நியாயம் கேட்டு வாதாடுவதற்கும் ஒருமுறைக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,600 இவர் கட்டணமாக வசூலிக்கிறார்.

வேலை செய்த நிறுவனத்தில் சம்பளம் தராமல் இழுத்தடிக்கும் முதலாளியிடம் தறிகெட்டு கேள்வி கேட்பது, கடைகளில் மோசமான சேவையைப் பெற்று ஏமாந்தவர்களுக்குப் பணத்தை மீட்டுத் தருவது என எந்தவொரு அநியாயமான பிரச்சினைக்கும் இவர் நேரில் களமிறங்குகிறார். கத்திப் பேசத் தெரியாத, சண்டை போடத் தயங்கும் அப்பாவிகளுக்கு இந்த ‘வாடகைச் சண்டைக்காரர்’ ஒரு வரப்பிரசாதமாக மாறியுள்ளார். இந்த வித்தியாசமான ஸ்டார்ட்-அப் ஐடியா தற்போது உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in