LATEST NEWS
கோடாரியால் சிதைந்த மண்டை ஓடு.. துணை விமானியின் கொடூர தாக்குதலில் 170 உயிர்களை காப்பாற்றிவிட்டு.. இந்திய கேப்டன் ஸ்மித் மச்சார் உயிர் பிழைத்து எப்படி..?
துபாயிலிருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற பிளைதுபாய் (Flydubai) விமானத்தின் இந்திய கேப்டன் ஸ்மித் மச்சார், தனது துணை விமானியால் கோடாரியால் தாக்கப்பட்ட சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூரமான தாக்குதலில் அவரது மண்டை ஓடு உள்நோக்கி உடைந்து நொறுங்கிய நிலையில், அவர் மரண விளிம்பிலிருந்து உயிர் பிழைத்துள்ளது மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்க நரம்பியல் நிபுணர் டாக்டர் சனத் தீட்சித் இது குறித்து கூறுகையில், கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு தலையின் பின்புறப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மண்டை ஓடு சிதைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய ஆபத்தான பாதிப்புகளுக்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில் உயிரிழப்புக்கான வாய்ப்பு சுமார் 40 சதவீதம் வரை இருக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், உடைந்த எலும்புத் துண்டுகளை அகற்றும் போது ஒரு நிமிடத்திற்குள் சுமார் இரண்டு லிட்டர் வரை ரத்தம் வெளியேறும் அதீத ரத்தப்போக்கு அபாயமும் அவருக்கு நிலவியுள்ளது.
இவ்வளவு கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி ரத்தப்போக்கு, மங்கிய பார்வை மற்றும் மயக்கம் ஏற்பட்ட நிலையிலும், கேப்டன் ஸ்மித் மச்சார் சாதுரியமாக விமானத்தின் கதவைத் திறந்து 170-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். விமானத்தில் நிகழ்ந்த இந்த கொடூரத் தாக்குதலையும் கடந்து, மருத்துவமனையில் தீவிரப் போராட்டத்திற்குப் பின் குணமடைந்து மீண்டு வந்துள்ள அவரது அசாத்திய தைரியத்தை ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் பாராட்டி வருகின்றன.
