“எனக்குப் பயமாக இருக்கிறது…” 6-வது மாடியிலிருந்து விழுந்த சிறுமி.. டிக்டாக் லைவ்-ல் அரங்கேறிய துயரம்.. நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எனக்குப் பயமாக இருக்கிறது…” 6-வது மாடியிலிருந்து விழுந்த சிறுமி.. டிக்டாக் லைவ்-ல் அரங்கேறிய துயரம்.. நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ..!!

Published

on

ஜப்பானில் டிக் டோக் நேரலையின்போது அடுக்குமாடி குடியிருப்பின் ஆறாவது மாடியில் இருந்து தவறி விழுந்து 14 வயது சிறுமி உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. கேமராவில் பதிவான இச்சம்பவம், அவரது நண்பர்களையும் பின்தொடர்பவர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரூகா என அடையாளம் காணப்பட்ட அந்தச் சிறுமி, கட்டிடத்தின் கேலரி கைப்பிடிச் சுவரில் அமர்ந்திருந்தபோது நிலை தடுமாறி பின்னோக்கி விழுந்துள்ளார். அவர் கீழே விழுவதைத் தவிர்க்க சில வினாடிகள் கைப்பிடியைப் பற்றிக்கொள்ள முயன்று, இறுதியில் பிடியை இழந்து கீழே விழுவதை அந்த வீடியோ காட்சிகள் காட்டுகின்றன. இச்சம்பவத்தில் கடுமையான தலைக்காயங்களுக்கு ஆளான அவர் பின்னர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஒரு நடுநிலைப் பள்ளி மாணவி ஆவார்.

Advertisement

இந்த நேரலையின்போது அவர் “எனக்குப் பசிக்கிறது”, “எனக்குப் பயமாக இருக்கிறது”, “இது ஆபத்தானது” போன்ற வாசகங்களை மீண்டும் மீண்டும் கூறியதாகப் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். விபத்தைத் தொடர்ந்து அந்த நேரலை ஒளிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. நேரலையின்போதே இந்தத் துயரம் அரங்கேறியது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், அவர் சமீபகாலமாகச் சந்தித்து வந்த தனிப்பட்ட சிரமங்கள் மற்றும் உளவியல் அழுத்தங்கள் குறித்தும் அவருக்கு நெருக்கமானவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in