“2035-ல் உலகின் நம்பர் 1 மதமாக மாறும் இஸ்லாம்..” 2070-ல் உலகம் எப்படி மாறப்போகிறது தெரியுமா..? பியூ ஆய்வு மையம் வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“2035-ல் உலகின் நம்பர் 1 மதமாக மாறும் இஸ்லாம்..” 2070-ல் உலகம் எப்படி மாறப்போகிறது தெரியுமா..? பியூ ஆய்வு மையம் வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்..!!

Published

on

உலகளாவிய மதங்களின் மக்கள்தொகை மாற்றங்கள் குறித்துக் கடந்த 25 ஆண்டுகளாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் பிரபல பியூ ஆய்வு நிறுவனம், வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய மதமாக இஸ்லாம் உருவெடுக்கும் எனத் தனது புதிய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. உலக அளவில் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய இரு மதங்களின் மக்கள்தொகையும் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், கிறிஸ்தவத்தை விட இஸ்லாம் மதத்தின் வளர்ச்சி வேகம் மிக அதிகமாக இருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதற்கு முக்கியக் காரணமாக, உலகின் முக்கிய மதப் பிரிவுகளிடையே முஸ்லிம் பெண்களின் கருவுறுதல் விகிதம் அதிகமாக இருப்பதே எனக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, முஸ்லிம் பெண்களுக்குச் சராசரியாக 3.1 குழந்தைகளும், கிறிஸ்தவப் பெண்களுக்கு 2.5 குழந்தைகளும், பிற மதங்களைச் சேர்ந்த பெண்களுக்கு 1.6 குழந்தைகளும் பிறப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மக்கள்தொகை எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும்போது, 2020-ஆம் ஆண்டில் 202 கோடியாக இருந்த உலக முஸ்லிம்களின் மக்கள்தொகை, 2035-ஆம் ஆண்டில் 257 கோடியாக உயர்ந்து கிறிஸ்தவ மக்கள்தொகையை விஞ்சும் என்றும், 2070-ஆம் ஆண்டுக்குள் 360 கோடியைத் தாண்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா மற்றும் கனடாவில் கிறிஸ்தவர்களின் பெரும்பான்மை நிலை குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கனடாவில் 2030-ஆம் ஆண்டுக்குள் கிறிஸ்தவர்களின் மக்கள்தொகை 50 சதவீதத்திற்கும் கீழ் குறையும் என்றும், 2065-ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நிலை மாறும் என்றும் பியூ ஆய்வு மையம் கணித்துள்ளது.

Advertisement

மேலும், எதிர்காலத்தில் உலக மக்கள்தொகை வளர்ச்சியின் பெரும்பகுதி துணை சஹாரா ஆப்பிரிக்கப் பகுதிகளிலேயே ஏற்படும் என அந்த அறிக்கை கூறுகிறது. 2070-ஆம் ஆண்டுக்குள் உலகில் உள்ள ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் துணை சஹாரா ஆப்பிரிக்கப் பகுதிகளிலேயே வசிப்பார்கள் என்றும், அப்பகுதியில் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய இரு மதங்களுமே தொடர்ந்து அசுர வளர்ச்சியடையும் என்றும் பியூ ஆய்வு மையத்தின் அறிக்கையில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in