“மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிக்கிறேன்…” உச்ச நீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தாக்கல் செய்த 17 பக்க ரகசிய அறிக்கை.. திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் வெளியான பகீர் தகவல்..!1! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிக்கிறேன்…” உச்ச நீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தாக்கல் செய்த 17 பக்க ரகசிய அறிக்கை.. திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் வெளியான பகீர் தகவல்..!1!

Published

on

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா சார்பில் 17 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கை ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மலைத்தூணில் தீபம் ஏற்றப்படாத சூழல் ஏற்பட்டதற்காகத் தான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய கோயில் தேவஸ்தான நிர்வாகம் எந்தவொரு குழுவையும் அமைக்கவில்லை என ஆட்சியர் குற்றம் சாட்டியுள்ளார். தேவஸ்தானம் தரப்பில் உரிய குழுக்கள் அமைக்கப்பட்டு முன்னேற்பாடுகள் செய்யப்படாததே இதற்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

இத்தகைய சூழல் காரணமாகவே, கோயில் அறங்காவலர் குழுவினர் மலைத்தூணுக்குப் பதிலாக வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே விளக்கு ஏற்றுவது என முடிவு எடுத்ததாகவும் அந்த 17 பக்க அறிக்கையில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்துள்ள இந்த அறிக்கை தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in