“எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு”…. புகைப்படத்தை பகிர்ந்து சமந்தா போட்ட பதிவு…. எதற்காக தெரியுமா….???? – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு”…. புகைப்படத்தை பகிர்ந்து சமந்தா போட்ட பதிவு…. எதற்காக தெரியுமா….????

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனிடையே சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சமந்தாவுக்கு சமீபத்தில் அரிய வகை நோய் ஒன்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

அதாவது சமந்தாவிற்கு மையோ சிடிஸ் என்று அரிய வகை நோய் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை சமந்தா வெளியிட்டார். இதனை தொடர்ந்து அவர் விரைவில் குணமடைய வேண்டி திரை உலகிநர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் தான் நடித்துள்ள யசோதா படத்திற்காக பிரமோஷன் செய்துள்ளார் சமந்தா.

Advertisement

அப்போது சமந்தா அளித்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலானது. இந்தத் திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட பழமொழிகளில் ஒரே நேரத்தில் நவம்பர் 11ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் நாளை யசோதா திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் சமந்தா புதிய புகைப்படத்துடன் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் ரொம்ப பதட்டமாக உணர்கிறேன் அதே வேளையில் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கிறேன், இன்னும் ஒரு நாள்தான் என அவர் பகிர்ந்துள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Samantha இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@samantharuthprabhuoffl)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in