LATEST NEWS
வட போச்சே…. அந்த படத்தில் சமந்தா இடத்தை தட்டி தூக்கிய பிரபல நடிகை…. ஷாக்கான ரசிகர்கள்….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனிடையே சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சமந்தாவுக்கு சமீபத்தில் அரிய வகை நோய் ஒன்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. அதாவது சமந்தாவிற்கு மையோ சிடிஸ் என்று அரிய வகை நோய் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை சமந்தா வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து அவர் விரைவில் குணமடைய வேண்டி திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சமந்தா தற்போது சிகிச்சை முடிந்து ஓரளவு உடல் நலம் தேறியுள்ளார். அது மட்டுமல்லாமல் அவர் நடிப்பில் யசோதா திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்திற்கு பிறகு எந்த படத்தில் சமந்தா நடிக்காமல் தான் இருக்கிறார்.
அடுத்ததாக துல்கர் சல்மானின் கிங் ஆப் கோத்தா என்ற திரைப்படத்தில் கவர்ச்சியான பாடல் ஒன்று இருக்கு சமத்தா ஆடை இருந்தார். புஷ்பா திரைப்படத்தில் இடம் பெற்ற ஊ சொல்றியா மாமா என்ற பாடல் போல அதுவும் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சமந்தாவிற்கு பதிலாக ரித்திகா சிங் தான் அந்த பாடலுக்கு கிளாமராக டான்ஸ் ஆட உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/DIPK_OFFICIAL/status/1591045801907982336
