ஆர்ஜே பாலாஜியின் மனைவி, மகன்களை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஆர்ஜே பாலாஜியின் மனைவி, மகன்களை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஆர் ஜே பாலாஜி. இவர் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே பிரபல வானொலியில் பணியாற்றி வந்ததால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவரின் குரலுக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு புத்தகம் என்ற படம் பின்னணியில் பேசி தனது பயணத்தை தொடங்கினார். பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படத்தில் துணை நடிகராக நடித்ததன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இவர் கிட்டதட்ட 20 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.முதன்முறையாக கடந்த 2019 ஆம் ஆண்டு எல்கேஜி என்ற திரைப்படம் மூலம் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய இவர் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படம் மூலம் இயக்குனர் அவதாரமும் எடுத்தார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து அண்மையில் இவரின் நடிப்பில் வெளியான வீட்டுல விசேஷம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு பக்கம் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் கிரிக்கெட் பணியிலும் தொடர்ந்து வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆர் ஜே பாலாஜி தற்போது குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு டூர் சென்ற புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

RJ Balaji இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@irjbalaji)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in