அரசு வேலையில் இருக்கும் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்கள்…. சிறப்பு தொகுப்பு…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அரசு வேலையில் இருக்கும் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்கள்…. சிறப்பு தொகுப்பு…!!!

Published

on

பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் அனைவருமே சிறந்த வீரர்களில் ஒருவராக இடம் பிடிப்பதற்கு கடுமையாக உழைக்கிறார்கள். அவர்கள் அந்த இடத்தை அடைந்ததும் முன்மாதிரியாக மாறிவிடுகின்றனர். ஒவ்வொருவரும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார்கள். அதில் ஒரு சில இந்திய கிரிக்கெட் வீரர்கள் அரசு வேலையில் உள்ளனர். அவர்கள் குறித்த தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.

சச்சின் டெண்டுல்கர்:

Advertisement

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் மாஸ்டர் பிளாஸ்டர் கௌரவ விருதை வென்ற முதல் விளையாட்டு வீரர். இந்திய கிரிக்கெட்டுக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக விமானப்படை இவருக்கு குழு தலைவர் பதவியை வழங்கியுள்ளது.

யுஸ்வேந்திர சாஹல்:

Advertisement

இந்திய அணையின் சுழல் பந்துவீச்சாளரான இவர் கிரிக்கெட் மைதானத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக வருமான வரித்துறை இவருக்கு வருமான வரி அதிகாரியாக பணி வழங்கியுள்ளது.

தோனி :

Advertisement

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி சமீபத்தில் ஐபிஎல் போட்டியில் ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றார். இவர் ராணுவத்தால் லெப்டினன்ட் கர்னல் என்ற கௌரவ பதவியைப் பெற்றார். மேலும் இந்திய ராணுவத்தின் பேராஷூட் ரெஜிமெண்டில் இந்த பதவியை பெற்றார்.

கே எல் ராகுல்:

Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஆக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் கேல் ராகுல். இவரின் கிரிக்கெட் திறமையை இந்திய ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது இவருக்கு உதவி மேலாளர் பணி வழங்கியுள்ளது.

உமேஷ் யாதவ்:

Advertisement

இந்திய அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளரான இவர் 2017 ஆம் ஆண்டு நாக்பூரில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியில் உதவி மேலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

ஜோகிந்தர் ஷர்மா:

Advertisement

இந்திய அணி 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வென்ற தெற்கு முக்கிய வீரராக திகழ்ந்தவர் இவர் தான். இதனைத் தொடர்ந்து ஹரியானா அரசால் இவருக்கு துணை காவல் கண்காணிப்பாளர் பதவி வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஹர்பஜன் சிங்:

Advertisement

ஹர்பஜன் சிங் ஆப் ஸ்பின் வந்து வீட்டில் கை தேர்ந்தவர். அதுமட்டுமின்றி 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் பஞ்சாப் காவல்துறையில் துணை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.

கபில் தேவ்:

Advertisement

இந்திய கிரிக்கெட் அணிக்கு இவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. இதனால் இவர் சேவையை பாராட்டும் விதமாக ராணுவத்தால் லெப்டினென்ட் கர்னல் பதவி இவருக்கு வழங்கப்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in