பிரபல வில்லன் நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல வில்லன் நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!

Published

on

சினிமாவில் பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் கசான் கான் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் தமிழில் 1992 ஆம் ஆண்டு வெளியான செந்தமிழ் பாட்டு என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக சினிமாவிற்குள் நுழைந்தார்.

அதன் பிறகு பல திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு வில்லன் வேடம் அற்புதமாக பொருந்தியது. அதனால் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அதன்படி சேதுபதி ஐபிஎஸ், மேட்டுக்குடி, வானத்தைப்போல மற்றும் முறைமாமன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் உச்சத்தில் இருந்த நடிகர்களுக்கு வில்லனாக நடித்து சிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

Advertisement

அதேசமயம் விஜய் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான பிரியமானவளே என்ற திரைப்படத்திலும் இவர் வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் இவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவரின் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in