லியோ ஷுட்டிங் ஸ்பாட்டில் குடும்பத்துடன் பிரபல வில்லன் நடிகர்… வெளியான அழகிய புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

லியோ ஷுட்டிங் ஸ்பாட்டில் குடும்பத்துடன் பிரபல வில்லன் நடிகர்… வெளியான அழகிய புகைப்படங்கள்…!!!

Published

on

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் தான் பாபு ஆண்டனி. இவர் முதன் முதலில் கடந்த 1985 ஆம் ஆண்டு சத்ரு என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

அதில் இவர் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருப்பார். அதன் பிறகு பூவினு புதிய பூந்தென்றல், சிலம்பு, விருத்தம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

Advertisement

அதன் பிறகு தமிழில் 1987 ஆம் ஆண்டு சத்யராஜுடன் பூவிழி வாசலிலே மற்றும் மக்கள் என் பக்கம் என்ற திரைப்படத்தில் இவர் நடிகராக அறிமுகமானார்.

அந்தத் திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன.

Advertisement

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என பழமொழி திரைப்படங்களில் இவர் வில்லன் கதாபாத்திரங்களில் பெரும்பாலும் நடித்து வருகின்றார்.

குறிப்பாக விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் காக்கா முட்டை ஆகிய திரைப்படங்களில் இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

Advertisement

இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதனைப் போலவே ரௌத்திரம், சூரியன், காஞ்சனா 2, அடங்கமறு உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Advertisement

இவர் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் தான் அதிக அளவு நடித்துள்ளார். இதனிடையே இவர் ரஷ்ய அமெரிக்க பியானோ கலைஞரான எவ்ஜெனியா ஆண்டனியை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு ஆர்தர் ஆண்டனி மற்றும் அலெக்ஸ் ஆண்டனி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களின் மகன்கள் இருவருமே தற்காப்பு கலைகளில் பயிற்சி பெற்றவர்கள்.

Advertisement

அதேசமயம் மூத்த மகன் ஆர்டர் எம் எம் ஏ வில் டாட் பிளாக் பெல்ட் பெற்றார். மலையாளத்தில் philips and the monkey என்ற படத்தில் இவர் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

அதனைப் போலவே ஆர்தர் பாபு ஆண்டனி தி கிரேட் எஸ்கேப் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவரும் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளதால் முதல் படமே ஆக்சன் படமாக நடித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் பாபு ஆண்டனி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடித்து வரும் நடிகர் பாபு ஆண்டனி குடும்பத்துடன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார்.

Advertisement

அவர் அங்கு சஞ்சய் தத்துடன் குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் அவருடைய ரஷ்ய மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in