‘காசி’ பட நடிகை காவ்யா மாதவனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?.. வைரலாகும் புகைப்படங்கள் … – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘காசி’ பட நடிகை காவ்யா மாதவனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?.. வைரலாகும் புகைப்படங்கள் …

Published

on

இயக்குனர் வினயன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான படம் ‘காசி’ . இப்படத்தில் விக்ரம்,  காவேரி, காவ்யா மாதவன், மணிவண்ணன், விஷ்ணு சக்கரவர்த்தி,  சார்லி,  தலைவாசல் விஜய்,  வடிவுக்கரசி, ஐஸ்வர்யா போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா  இசையமைத்துள்ளார். இப்படத்தில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை காவியா மாதவன். இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்.

Advertisement

நடிகை காவியா ‘கமலின் பூக்களம் வரவாய்’ என்ற  மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது  திரை பயணத்தை தொடங்கினார். அதைத் தொடர்ந்து பாவம் ஐஏ இவச்சான், பரஸ்சல பச்சன் பையனூர் பரமு, அழகிய ராவணன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

நடிகர் திலீப் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான ‘சந்திரனுடிக்குன்னா திகில்’ என்ற படத்தின் மூலம் மலையாளத்தில்  கதாநாயகியாக அறிமுகமானார். இப்படமானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

Advertisement

அதை தொடர்ந்து இவர் ஏராளமான மலையாள திரைப்படங்களில் நடித்தார்  நடிகை காவ்யா மாதவன் மம்முட்டி, மோகன் லால் ,போன்ற  பிரபலங்களுடன் நடித்துள்ளார். இவர் தமிழில் என் மன வாழ்வில், சாது மிரண்டா போன்ற  படங்களில் நடித்துள்ளார .

இவர் பூமிக்கொரு சரமகீதம், காவலால் போன்ற குறும்படங்களிலும் நடித்துள்ளார். நடிகை காவ்யா மாதவன்  நிஷால் சந்திராவை என்பவரை  2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவரின் கருத்து  வேறுபாட்டின் காரணமாக 2011 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

Advertisement

அதன் பிறகு நடிகை காவ்யா மாதவன் நடிகர் திலீப் குமாரை 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகாலட்சுமி என்ற ஒரு மகளும் உள்ளார் .இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது  இணையத்தில் வெளியாகியுள்ளது.

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in