CRIME
“அம்மா.. அப்பா..” பெற்றோர் உடல்களைப் பார்த்து கதறிய 6 வயது சிறுமி.. சொந்த குடும்பத்தையே கொடூரமாக தீர்த்த அரக்கன்.. நெஞ்சை பதறவைக்கும் பகீர் பின்னணி..!!
அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள ஹோட்டல் ஒன்றில், சொத்துத் தகராறு காரணமாகக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரைச் சொந்த உறவினரே துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கோரச் சம்பவத்தில் தேவர்ஷி, அவரது மனைவி ரினிகா, அவர்களது தாய் மற்றும் மாமா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஹோட்டல் அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த தங்களது தாய் மற்றும் தந்தையின் சடலங்களைப் பார்த்த இத்தம்பதியின் 6 வயது மகள், கதறி அழுத நெஞ்சை உலுக்கும் காட்சி பார்ப்போரைக் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.
இந்தக் கொடூரத் துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்னால் இருக்கும் கனகாந்தா கோகோய் என்ற நபர், வெறும் மனித உயிர்களைக் கொல்லவில்லை, மாறாக ஒட்டுமொத்தக் குடும்பத்தின் எதிர்காலத்தையே சிதைத்துள்ளார். இக்கொலையின் காரணமாக, உயிரிழந்த தம்பதியரின் 6 வயது மகளும், வெறும் ஒன்றரை வயதே ஆன அவரது தம்பியும் ஒரே நாளில் பெற்றோரை இழந்து அநாதரவாக நட்டாற்றில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்தவொரு குழந்தையும் தங்களது வாழ்வில் சந்திக்கக் கூடாத இந்த மாபெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ள பச்சிளம் குழந்தைகளை இனி யார் தத்தெடுத்துப் பார்த்துக் கொள்வார்கள் என்ற கேள்வி ஒட்டுமொத்த சமூக ஆர்வலர்களிடையேயும் பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
