LATEST NEWS
“குழந்தை பிறந்த ஒரே மாசத்துல தாய் மரணம்..” தந்தையிடம் பேத்தியைத் தர மறுத்த தாத்தா… பம்பாய் உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!!
தாயை இழந்த 4 வயது பெண் குழந்தையை அதன் இயற்கை பாதுகாவலரான தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என தாய்வழி தாத்தாவுக்குப் பம்பாய் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. குழந்தை பிறந்த ஒரு மாதத்திலேயே தாய் மாரடைப்பால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, குழந்தையைத் தாத்தா மற்றும் அவரது குடும்பத்தினர் வளர்த்து வந்தனர். குழந்தையைத் திரும்பப் பெறத் தந்தை எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், குடும்ப நீதிமன்றத்தை அணுகி சாதகமான உத்தரவை பெற்றார்.
அதை எதிர்த்துத் தாத்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதிகள், தாய் இல்லாத சூழலில் இந்து சிறுபான்மையினர் மற்றும் பாதுகாப்பாளர் சட்டம், 1956-ன் படி தந்தையே குழந்தையின் முதன்மை இயற்கை பாதுகாவலர் என்றும், குழந்தையின் எதிர்கால நலன் தந்தையிடம் இருப்பதுதான் சரியானது என்றும் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர். மேலும் 15 நாட்களுக்குள் குழந்தையைத் தந்தையிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
