“ஐயோ.. இப்படி ஒரு சாவா..!” ஒரு செல்ஃபி ஆசை… ராட்சத இயந்திர டைனோசருக்குள் பிணமாக மீட்கப்பட்ட நபர்.. நெஞ்சை உறைய வைக்கும் பயங்கரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஐயோ.. இப்படி ஒரு சாவா..!” ஒரு செல்ஃபி ஆசை… ராட்சத இயந்திர டைனோசருக்குள் பிணமாக மீட்கப்பட்ட நபர்.. நெஞ்சை உறைய வைக்கும் பயங்கரம்..!!

Published

on

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா மாகாணத்தில் உள்ள சாண்டா கொலோமா டி கிராமினெட் பகுதியில், இயந்திர டைனோசர் பொம்மையுடன் புகைப்படம் எடுக்க முயன்ற 39 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அதன் உள்ளே சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காகிதக் கூழ் மற்றும் இரும்பு கட்டமைப்புகளால் செய்யப்பட்ட அந்த ராட்சத டைனோசர் சிலைக்குள் விழுந்த தனது மொபைல் போனில் போட்டோ எடுப்பதற்காக அந்த நபர் அதன் தலையை வாயில் வழியாக நுழைந்துள்ளார். எதிர்பாராதவிதமாக அவர் தலைகீழாக உள்ளே சிக்கிக் கொண்டதால், அவரால் மீண்டும் வெளியே வர முடியாமல் போயுள்ளது. இரண்டு நாட்களாக அவரைத் தேடி வந்த நிலையில், அந்தப் பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து உள்ளூர் மக்களும், ஒரு தந்தையும் மகனும் டைனோசர் சிலைக்குள் மனித உடல் இருப்பதைக் கண்டு போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

https://twitter.com/TylkoPrawi/status/2113416477831229454?s=20

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், டைனோசரின் சிலைக்குள் பிணமாகக் கிடந்த அந்த நபரின் உடலை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில், இதில் எவ்வித குற்றச்சதிச் செயலும் இல்லை என்றும், போனை எடுக்க முயன்றபோது ஏற்பட்ட விபத்தால் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் அந்தப் பொழுதுபோக்கு மையத்தின் பாதுகாப்பு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி $1.5 மில்லியன் இழப்பீடு கோரி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விசித்திரமான மற்றும் துயரமான மரணம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in