யாரு சாமி இவரு..? “காளைகளுக்கு பதில் யானை” வயலில் கலப்பை கட்டி விசித்திரமாக உழுத விவசாயி.. வைரல் வீடியோவால் கொதித்தெழுந்த நெட்டிசன்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

யாரு சாமி இவரு..? “காளைகளுக்கு பதில் யானை” வயலில் கலப்பை கட்டி விசித்திரமாக உழுத விவசாயி.. வைரல் வீடியோவால் கொதித்தெழுந்த நெட்டிசன்கள்..!

Published

on

அசாம் மாநிலத்தில் விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுவதற்குக் காளைகளுக்குப் பதிலாகத் தனது வளர்ப்பு யானையைப் பயன்படுத்திய விசித்திரமான சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கோலகாட் மாவட்டம், நுமாலி நகர் அருகே உள்ள முர்புலானி கிராமத்தைச் சேர்ந்த அதுல் கர்மாகர் என்ற விவசாயி, தான் வளர்த்து வரும் ‘மாணிக்’ என்ற ஆண் யானையை இந்த உழவுப் பணிக்குப் பயன்படுத்தியுள்ளார்.

தமது விவசாய நிலத்தில் கடுகு சாகுபடி செய்வதற்காக நிலத்தைப் பக்குவப்படுத்தும் நோக்கில் அவர் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். பாகனின் வழிகாட்டுதலின்படி, யானை மாணிக்கின் உடலில் ஏர்க்கலப்பையைக் கட்டி, அது வயலில் மெதுவாக அடி மேல் அடி வைத்து மண்ணை உழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன. தமிழர்களின் பழங்கால ‘ஆனைகட்டிப் போரடிக்கும்’ வரலாற்றுப் பெருமையை இந்த நிகழ்வு பலருக்கும் நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.

Advertisement

இருப்பினும், டிராக்டர்கள் போன்ற நவீன எந்திரங்கள் பயன்பாட்டில் உள்ள இந்தக் காலத்தில், கம்பீரமான வனவிலங்குகளை இதுபோன்ற கடினமான விவசாய வேலைகளுக்குப் பயன்படுத்துவது தவறு என வனவிலங்கு ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். விலங்குகளுக்குச் செய்யப்படும் இந்த அநீதியைத் தவிர்த்து, எந்திரங்களையே பயன்படுத்த வேண்டும் எனச் சமூக வலைதளவாசிகளும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in