நயன்தாரா, கியாரா அத்வானி என மெகா கூட்டணி…கேஜிஎஃப் யஷ் ரசிகர்களுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்…பெண் இயக்குநரின் அசாத்திய முதிர்ச்சி! சர்வதேச தரத்தில் செதுக்கப்படும் யஷ்ஷின் ‘டாக்ஸிக்’ திரைப்படம்…! – cinefeeds
Connect with us

CINEMA

நயன்தாரா, கியாரா அத்வானி என மெகா கூட்டணி…கேஜிஎஃப் யஷ் ரசிகர்களுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்…பெண் இயக்குநரின் அசாத்திய முதிர்ச்சி! சர்வதேச தரத்தில் செதுக்கப்படும் யஷ்ஷின் ‘டாக்ஸிக்’ திரைப்படம்…!

Published

on

நள தமயந்தி’ திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் நெஞ்சங்களைக் கவர்ந்த கீது மோகன்தாஸ், தற்போது கன்னட சூப்பர் ஸ்டார் யஷ்ஷை வைத்து இயக்கி வரும் ‘டாக்ஸிக்’ (Toxic: A Fairy Tale for Grown-ups) திரைப்படம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் மாதம் வெளியாகவிருந்த இத்திரைப்படம், ரிலீஸ் தேதி போட்டி காரணமாகத் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கீது மோகன்தாஸின் இயக்கத்தில் நடிகர் யஷ்ஷுக்குத் திருப்தி இல்லாததால் படத்தின் பல காட்சிகள் மீண்டும் ரீ-ஷூட் செய்யப்பட உள்ளதாகச் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கள் பரவின. இந்நிலையில், இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இயக்குநர் கீது மோகன்தாஸுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள ஸ்பெஷல் பிடிஎஸ் (BTS) வீடியோ இந்த வதந்திகளுக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

கே.வி.என் புரோடக்‌ஷன்ஸ் வெளியிட்டுள்ள இந்த மேக்கிங் வீடியோ, ‘டாக்ஸிக்’ திரைப்படம் எந்தளவுக்குப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது என்பதைப் பறைசாற்றுகிறது. செட்களின் பிரம்மாண்டம், தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு மற்றும் படப்பிடிப்பு தளத்தில் செம பிஸியாகப் பணியாற்றும் கீது மோகன்தாஸின் கூர்மையான படைப்பாற்றல் ஆகியவை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. ஒரு பெண் இயக்குநராக இவ்வளவு பெரிய பட்ஜெட் மற்றும் நட்சத்திரப் பட்டாளம் கொண்ட மெகா படத்தை அவர் துல்லியமாகக் கையாளும் விதம் திரையுலகினரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. வசனங்களை விட அமைதியான தருணங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதிலும், சர்வதேசத் தரத்தில் காட்சிகளைச் செதுக்குவதிலும் அவர் காட்டும் முதிர்ச்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.

Advertisement

இந்தியத் திரையுலகின் மிகப்பெரிய கூட்டணியாக உருவெடுத்துள்ள இப்படத்தில், யஷ் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது ரசிகர்களுக்குக் கூடுதல் சுவாரசியத்தை தந்துள்ளது. கே.வி.என் மற்றும் யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் சூழலில், படத்தின் ரிலீஸ் தேதியைச் சீக்கிரமே அறிவிக்குமாறு யஷ் ரசிகர்கள் தற்போதே ஆவலுடன் கோரிக்கை விடுக்கத் தொடங்கியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in