LATEST NEWS
“கே-டிராமால கூட இப்படி ஒரு கதை இருக்காது..” ஒரே நபருக்கு ஒரே இடத்தில் நடந்த இரட்டை விழா… ஹோட்டல் ஊழியர்களை உரைய வைத்த சம்பவம்..! வைரல் வீடியோ..!!
சீனாவில் கொரிய நாடகங்களை விடவும் மிகவும் வித்தியாசமான மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வூ என்ற நபரின் திருமண விருந்தும், அதே நபர் தனது முன்னாள் காதலியுடன் பெற்ற குழந்தையின் 100-வது நாள் பிறந்தநாள் விழாவும் ஒரே நாளில், ஒரே மண்டபத்தில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருமண விழாவிற்கு வந்த விருந்தினர்களும், குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்கு வந்த உறவினர்களும் ஒரே இடத்தில் எதிரெதிரே சந்தித்தபோது இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் மற்றும் வாக்குவாதம் வெடித்தது. நிலைமை கைமீறிச் சென்றதால், மண்டபத்தின் ஊழியர்கள் உடனடியாகக் காவல்துறையினரை அழைத்து நிலைமையைக் கட்டுப்படுத்த வேண்டியதாயிற்று.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், அந்த நபர் சட்டப்பூர்வமாக ஒரு பெண்ணை மட்டுமே திருமணம் செய்துகொண்டதால் அவர் மீது இருதார மணக் குற்றம் சுமத்த முடியாது எனக் கூறிவிட்டனர். எனினும், இரு குடும்பத்தினருக்கும் இடையே நிலவி வரும் நிதிச் சிக்கல்கள் குறித்து உள்ளூர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
