LATEST NEWS
“அடிக்கடி சிம் கார்டு மாத்துறீங்களா..?” இனி ஆதார் சென்டருக்கு அலைய வேண்டாம்,,. மொபைல் நம்பரை வீட்டில் இருந்தபடியே நொடியில் மாற்றலாம்.. எப்படி தெரியுமா..?!
இன்றைய காலகட்டத்தில் ஆதார் கார்டு என்பது பல்வேறு தேவைகளுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் மிக அவசியமான ஆவணமாக விளங்குகிறது. இருப்பினும், உங்கள் ஆதார் அட்டையுடன் சரியான மற்றும் தற்போதைய மொபைல் எண் இணைக்கப்பட்டிருப்பது மிகவும் அவசியமாகும். அவ்வாறு இல்லையென்றால், பல்வேறு ஆன்லைன் சேவைகள் மற்றும் ஓடிபி மூலம் சரிபார்ப்பு செய்வதில் கடுமையான சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
இதற்கு முதலில் பிளே ஸ்டோரிலிருந்து ஆதார் செயலியைப் பதிவிறக்கம் செய்து, உங்கள் ஆதார் எண் மற்றும் முக அங்கீகாரம் அல்லது ஓடிபி மூலம் உள்நுழைந்து 6 இலக்க M-PIN எண்ணை உருவாக்க வேண்டும். பின்னர் அந்த பின் எண்ணை உள்ளிட்டு செயலியின் முகப்புப் பக்கத்தில் உள்ள ‘சேவைகள்’ பிரிவின் கீழ் ‘My Aadhaar’ என்பதைத் தேர்ந்தெடுத்து Continue கொடுக்கவும். அடுத்து தோன்றும் திரையில் உங்கள் பழைய மொபைல் எண்ணுடன், நீங்கள் இணைக்க விரும்பும் புதிய மொபைல் எண்ணை உள்ளிட்டு, அதற்கு வரும் ஓடிபி எண்ணைப் பதிவு செய்து, இறுதியாக கேமராவைத் திறந்து முக அங்கீகாரம் செய்வதன் மூலம் சரிபார்ப்பை நிறைவு செய்யலாம்.
ஆதார் கார்டில் வேறு எந்தவொரு திருத்தங்களைச் செய்வதாக இருந்தாலும் மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி மூலமாகவே செயல்முறையை முடிக்க முடியும். எனவே, ஆதார் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்கள் மொபைல் எண்ணை ஆக்டிவாகவும் அப்டேட்டாகவும் வைத்திருப்பதோடு, புதிய எண்ணை மாற்றினால் உடனடியாக அதனை ஆதார் கார்டில் இணைத்துவிட வேண்டும்.
