சன் டிவியிலிருந்து வேறு சேனலுக்கு தாவிய ரோஜா சீரியல் நடிகை…. செம குஷியில் ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சன் டிவியிலிருந்து வேறு சேனலுக்கு தாவிய ரோஜா சீரியல் நடிகை…. செம குஷியில் ரசிகர்கள்….!!!!

Published

on

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. பெரும்பாலான சீரியல்கள் குடும்ப கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதால் சன் டிவி சீரியல்களுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அப்படி சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருந்த சீரியல்தான் ரோஜா. டி ஆர் பி யில் முன்னணியில் இருந்து வந்தா இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பு தான் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து மீண்டும் சிபு சூரியன் மற்றும் பிரியங்கா நல்காரி இருவரும் ஜோடி சேர்ந்து நடிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இதுவரை எந்த புதிய தொடரிலும் அவர்கள் நடிக்கவில்லை.

இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தற்போது பிரியங்கா நல்காரி ஜீ தமிழில் நடிக்க தொடங்கியுள்ளதாக ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. சீதாராமன் என்ற புதிய தொடரில் அவர் ஹீரோயினியாக நடிக்க உள்ளாராம். இருந்தாலும் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in