ரோஜா சீரியல் நடிகையா இவர் …? கணவருடன் நீச்சல் குளத்தில் ரொமான்ஸ்… வைரலாகும் புகைப்படங்கள்…! - cinefeeds
Connect with us

TRENDING

ரோஜா சீரியல் நடிகையா இவர் …? கணவருடன் நீச்சல் குளத்தில் ரொமான்ஸ்… வைரலாகும் புகைப்படங்கள்…!

Published

on

சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இந்த சீரியல் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பை  கொடுத்தது. பிரியங்கா அதற்கு முன் தெலுங்கு மற்றும் தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும், இந்த சீரியல் பிரியங்காவை ரோஜா என்று அழைக்கும் அளவுக்கு பிரபலமடைந்தது.

மேலும் இவர் ரோஜா சீரியல்  முடிந்த பிறகு, ஜீ தமிழ் சீரியலான சீதாராமனில் நடித்தார். ரோஜா சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இது  மாமியார் – மருமகள் ஆடுபுலி விளையாட்டை மையமாக வைத்து உருவான சீரியல் ஆகும். பிரியங்கா ரோஜா சீரியல் போன்றே  இச்சீரியலும்  பிரியங்காவை இல்லத்தரசிகள் மத்தியில் கொண்டு சேர்த்த நிலையில், திடீரென காதலன் ராகுலை திருமணம் செய்து கொண்ட பிரியங்கா நல்காரி சீதாராமன் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அவர்களில் பலர் அவரது திருமண வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


மேலும் திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டில் செட்டிலாகி விட்டதாக கூறப்பட்ட பிரியங்கா, மீண்டும் சின்னத்திரைக்கு வருவாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில், திடீரென ஜீ தமிழின் நளதமயந்தி சீரியல் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஹோட்டல் நடத்தும் ஏழைப் பெண்ணுக்கும் தொழிலதிபருக்கும் இடையிலான மோதலைப் பற்றியதாகக் கூறப்படும் இந்த சீரியலின் கதை ஆகும்.  கடந்த வாரம் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் தவறாமல் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் கணவருடன் நீச்சல் குளத்தில் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில்  பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.