LATEST NEWS
“இதுதான் கடவுள் கூரைய பிச்சிகிட்டு கொடுக்கிறதோ” 7 ரூபா செலவு… ஒரு கோடி ரூபாய் லாட்டரி அடிச்சிருக்கு… கடைக்கு போன இடத்தில் அடித்த ஜாக்பாட்…!
பஞ்சாப் மாநிலம், ஃபரித்கோட் மாவட்டம் கோட்கபுராவைச் சேர்ந்த பிம்லா தேவி, வெறும் 7 ரூபாய்க்கு வாங்கிய லாட்டரி சீட்டின் மூலம் ரூ.1 கோடி முதல் பரிசை வென்று அசத்தியுள்ளார். தனது குடும்பத்தின் ஏழ்மை நிலையை மாற்றிய இந்த அதிர்ஷ்டத்தால் பிம்லா தேவியும் அவரது குடும்பத்தினரும் அளவற்ற மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.
தன்னுடைய குழந்தைகளுக்குப் புத்தாடைகள் வாங்குவதற்காக பிம்லா தேவி கடைத்தெருவிற்குச் சென்றுள்ளார். அப்போது கோட்கபுரா ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு லாட்டரி கடையில், சிக்கிம் மாநில அரசின் ‘டியர் லட்சுமி’ (Dear Laxmi) வாராந்திர லாட்டரி சீட்டை வெறும் 7 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். வழக்கமாக லாட்டரி வாங்கும் பழக்கம் இல்லாத நிலையிலும், அன்று தற்செயலாக அவர் எடுத்த இந்த முடிவு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மறுநாள் லாட்டரி முடிவுகள் வெளியானபோது, தான் வாங்கிய சீட்டிற்கு ஒரு கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்திருப்பதை அறிந்து பிம்லா தேவி இன்ப அதிர்ச்சியடைந்தார். இந்த பரிசுத் தொகையைக் கொண்டு தனது குடும்பத்தின் கடுமையான நிதி நெருக்கடியைச் சமாளிக்கப் போவதாகவும், குழந்தைகளின் சிறப்பான எதிர்காலம் மற்றும் கல்விக்காகப் பயன்படுத்தப் போவதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
