LATEST NEWS
மனைவியை அந்த மாதிரி கேலி செய்தவர்களுக்கு.. ஒத்த வார்த்தையில் பதிலடி கொடுத்த அசோக் செல்வன்.. பதிவை பார்த்து பாராட்டும் ரசிகர்கள்..!!
நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனை சமீபத்தில் அசோக் செல்வன் மணம் முடித்தார். கீர்த்தி பாண்டியன் 2019 ஆம் ஆண்டு தும்பா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிலையில் அதனைத் தொடர்ந்து அன்பிற்கினியால் படத்தில் நடித்து அடுத்ததாக கண்ணகி மற்றும் ப்ளூ ஸ்டார் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்த போது அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இடையே காதல் மலர்ந்த நிலையில் இவர்கள் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
அருண் பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலி அருகே உள்ள இட்டேரி என்ற கிராமத்தில் அமைந்துள்ள பண்ணை வீட்டில் வெகு விமர்சையாக இவர்களின் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியான போது அசோக் செல்வன் போன்ற அழகான பையனுக்கு இப்படி ஒரு பெண் மனைவியா என்றும் இதைவிட பெட்டரா வேற பெண்ணை பார்த்திருக்கலாம் எனவும் பலரும் கருத்துக்களை பதிவிட்டனர்.
மேலும் கீர்த்தி பாண்டியனை உருவ கேலி செய்த நிலையில் மனைவி கீர்த்தி பாண்டியனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட அசோக் செல்வன், இந்த உலகின் மிகப்பெரிய பேரழகி உடன் நான் என்று பதிவிட்டுள்ளார். அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக அசோக் செல்வன் இந்த பதிவை பகிர்ந்துள்ள நிலையில் இந்த பதிவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க