இப்படி கூட லவ் ப்ரொபோஸ் பண்ணுவாங்களா?.. ஒத்த வார்த்தையை கூறி பிரதரர்னு கூப்பிட்ட பிரியாவை மடக்கிய அட்லீ.. சுவாரசிய காதல் கதை..!! - Cinefeeds
Connect with us

CINEMA

இப்படி கூட லவ் ப்ரொபோஸ் பண்ணுவாங்களா?.. ஒத்த வார்த்தையை கூறி பிரதரர்னு கூப்பிட்ட பிரியாவை மடக்கிய அட்லீ.. சுவாரசிய காதல் கதை..!!

Published

on

Atlee: இயக்குனர் அட்லீ – பிரியாவின் காதல் கதை.

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் அட்லீ. சினிமாவில் நுழைந்தபோது இயக்குனர் சங்கரிடம் எந்திரன் மற்றும் நண்பன் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் பிறகு ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவரை இயக்கிய அனைத்து திரைப்படங்களுமே வெற்றி பெற்றன.

சமீபத்தில் கூட பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த இவர் ஷாருக்கான் வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கியிருந்த நிலையில் இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே அட்லியின் மனைவி பிரியா கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.

இவ்வாறு அடலியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த இவர்கள் பிறகு காதலர்களாக மாறி திருமணம் செய்து கொண்டனர். முதலில் முகப்புத்தகம் என்ற குறும்படம் ஒன்றில் பிரியாவை நடிக்க வைத்த போது தான் அட்லிக்கும் அவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. அப்போது பிரியா அட்லீயை பிரதர் என்று அழைத்துள்ளார்.

அதன் பிறகு பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ ராஜா ராணி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ஒருநாள் பிரியாவை நேரில் சந்தித்துள்ளார். அப்போது தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதாக பிரியா கூறியது உடனே என்னுடைய ஜாதகத்தை தரவா என்று அட்லீ கேட்டுள்ளார். அப்போது தன்மேல் அவருக்கு காதல் இருப்பதை பிரியா உணர்ந்ததாகவும் பிறகு காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.