“எனக்கு பொண்ணு இல்லன்னு ரொம்ப வருத்தப்பட்டேன்”… ஆனா இப்போ… விவாகரத்திற்கு முன் மனம் திறந்த தனுஷ்..!! - cinefeeds
Connect with us

VIDEOS

“எனக்கு பொண்ணு இல்லன்னு ரொம்ப வருத்தப்பட்டேன்”… ஆனா இப்போ… விவாகரத்திற்கு முன் மனம் திறந்த தனுஷ்..!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவர் தமிழ் சினிமாவை தாண்டி தற்போது கோலிவுட் வரை கலக்கி கொண்டிருக்கிறார். தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் பிசியாக இருந்து வரும் இவருடைய நடிப்பில் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இதில் நடிகர் தனுஷ் இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார். தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த திரைப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Advertisement

இதனிடையே தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு யாத்திரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனால் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக திடீரென அறிவித்தனர். இவர்களின் பிரிவிற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் தனுஷின் பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது தனக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் மகள் இல்லையே என்ற வருத்தம் இருந்ததாகவும் தற்போது தன்னுடைய அண்ணன் செல்வராகவனின் மகள்  லீலாவதி தன் மீது அதிக பாசம் வைத்துள்ளதால் எனக்கு மகள் இல்லாத குறை சென்று விட்டது என்று தனுஷ் கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in