LATEST NEWS
இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் முன்னணி வாரிசு நடிகர் யார் தெரியுமா?… கண்டுபுடிங்க மக்களே!…
சமீபகாலமாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படங்களை பகிர்ந்து அவர்கள் யார் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்பொழுது தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நடிகர் மகேஷ் பாபுவின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
மிடுக்கான தோற்றம், கம்பீரமான பார்வை என ஆக்சன் ஹீரோவாகவே திரையில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் மகேஷ் பாபு. நடிப்பால் மட்டும் இன்றி தனது அன்பான குணத்தாலும் அதிக ரசிகர்களை கவர்ந்தார். பழம் பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மகனான இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். இவர் தமிழில் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘ஸ்பைடர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து தமிழில் நல்ல படங்களில் நடிக்க வாய்ப்புக்காக காத்திருக்கிறார் நடிகர் மகேஷ் பாபு. தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வரும் மகேஷ் பாபு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரின் திரைப்படங்கள் அனைத்தும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. நடிகர் மகேஷ்பாபு நடிகை நம்ரதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
தற்பொழுது அவரின் மகளும் ஒரு சோசியல் மீடியா ஸ்டார் தான்.அவருக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமாக ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளனர். நடிகர் மகேஷ் பாபுவின் நடிப்பில் அடுத்ததாக குண்டூர் காரம் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. தற்பொழுது நடிகர் மகேஷ் பாபுவின் சிறுவயது புகைப்படம் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.