மறைந்த நடிகர் மாரிமுத்து இறப்பிற்கு ஜோதிடர்கள் சாபம் தான் காரணமா?… வெளியான ஷாக்கிங் தகவல்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

மறைந்த நடிகர் மாரிமுத்து இறப்பிற்கு ஜோதிடர்கள் சாபம் தான் காரணமா?… வெளியான ஷாக்கிங் தகவல்…

Published

on

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வந்தவர் நடிகர் மாரிமுத்து. எதிர்நீச்சல் சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். எதிர்நீச்சல் சீரியலில் இவருடைய ஆதி குணசேகரன் கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்தது.  நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் கடந்த 1994ஆம் ஆண்டு பாக்கியலட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்ட மாரிமுத்துவிற்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில், நடிகர் மாரிமுத்து நேற்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து ஒருவரும் மீளவில்லை.  57 வயதாகும் இவருடைய மரணத்திற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தற்பொழுதும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தற்பொழுது இவரது உடல் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டு விட்டது.

Advertisement

தற்பொழுது இவரின் இறப்புக்கு ஜோசியக்காரர்களை இவர் மதிக்காமல் பேசியதும்,  அவர்கள் விட்ட சாபமும் ஒரு காரணம் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அதாவது சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழா தமிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற மாரிமுத்து அங்கிருந்த ஜோதிடர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டார். அந்த நிகழ்ச்சியில் பங்குபற்றிய ஜோதிடர் ஒருவர் மாரிமுத்துவின் உடல்நிலை பற்றி சொன்னார்.

அதாவது மாரிமுத்துவிடம் இடுப்பிற்கு மேல் உங்களுக்கு பிரச்சினை இருக்கிறது என கூற பதிலுக்கு மாரிமுத்து, இடுப்பிற்கு மேல் இதயம் ஓடிக்கொண்டே துடிக்கிறது எனக் கிண்டலாக கூறி இருந்தார்.  இந்நிலையில் அந்த விவாத நிகழ்ச்சியில் பங்கு பற்றிய ஜோதிடர் மகரிஷி கே ஆர் மந்த்ராச்சலம் அளித்துள்ள பேட்டியில் “மாரிமுத்துவின் மரணத்திற்கு காரணம் ஜோதிடர்கள் அல்ல. மேலும் “குறித்த விவாத நிகழ்ச்சி முடிந்ததும் மாரிமுத்து தங்களிடம் வந்து பேசியதாகவும், அந்நிகழ்ச்சியில் அப்படி பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்டதாகவும்’ கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement