LATEST NEWS
என்னது எதிர்நீச்சலில் ஆதிகுரசேகரனாக இவர் இல்லையா?.. பயங்கர வில்லனை தட்டி தூக்கிய சீரியல் குழு..!!

தமிழ் சின்னத்திரையில் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் மாரிமுத்து சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அதாவது அஜித்துடன் வாலி திரைப்படம் தொடங்கி மாறி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், ரஜினியின் ஜெயிலர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிகர் மாரிமுத்து குணசித்திர வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். அதே சமயம் இவர் நடித்து முடித்துள்ள பல திரைப்படங்களும் அடுத்தடுத்து வழியாக உள்ளன.
குறிப்பாக சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனைப் போலவே இந்தியன் 2 திரைப்படத்திலும் இவர் நடித்துள்ள நிலையில் கடந்த வாரம் திடீர் மாரடைப்பால் இவர் உயிரிழந்த நிலையில் இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியல் மூலம் புகழ்பெற்ற நடிகர் மாரிமுத்து மறைவுக்கு பிறகு அந்த சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் இனி நடிக்க போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சீரியல் குழுவினர் நடிகர் வேலராமமூர்த்தி இடம் கேட்ட நிலையில் அவர் இன்னும் அதற்கு ஓகே சொல்லவில்லை.
எனவே சீரியல் குழு நடிகர் ராதாரவி இடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவரும் ஒப்புக் கொள்ளாததால் தற்போது ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் பசுபதிக்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.