LATEST NEWS
என்னது ஏ.ஆர்.ரகுமான் இசைநிகழ்ச்சி விவகாரத்தில் நானா?.. விஜய் ஆண்டனி பரபரப்பு புகார்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். அதிலும் குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் இவரது திரை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அவரைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இவர் கொடுத்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இதனிடையே விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி, மழை பிடிக்காத மனிதன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பிச்சைக்காரன் 2 மற்றும் கொலை ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. இந்த நிலையில் யூடியூப் சேனல் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளதாக நடிகர் விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் மீது அன்பு கொண்ட என் அன்பு மக்களுக்கு வணக்கம், நான் இப்போது திருமண வேதனையுடன் இந்த கடிதம் மூலமாக சில சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க போகிறேன். Youtube சேனல் ஒன்றில் சகோதரி ஒருவர் என்னையும் சகோதரர் ஏ ஆர் ரகுமானையும் தொடர்பு படுத்தி பொய்யான வதந்தி ஒன்றை பரப்பியுள்ளார். அது முற்றிலும் பொய்யானது. அந்த youtube சேனல் மீது நான் மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன். அதில் வரும் தொகை அனைத்தையும் நலிவடைந்த இசைத்துறை நண்பர்களுக்கு முழுமையாக கொடுக்க முடிவு செய்துள்ளேன் என்று விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.