பல கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களே செய்யாததை செய்த நடிகர் விஜய் தேவர்கொண்டா… குவியும் பாராட்டுக்கள்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

பல கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களே செய்யாததை செய்த நடிகர் விஜய் தேவர்கொண்டா… குவியும் பாராட்டுக்கள்…

Published

on

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா ,மற்றும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் குஷி. முழுக்க முழுக்க இது ஒரு காதல் கதை கொண்ட திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் ஜெயராம், முரளி ஷர்மா, ரோகிணி மற்றும் சரண்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தெலுங்கில் உருவான இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்திய ஆகிய மொழிகளிலும் பான் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ள நிலையில் மூன்றே நாட்களில் 70 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளதாக படக்குழு அறிவித்தது.

Advertisement

இந்நிலையில் குஷி திரைப்பட வெற்றி விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் தேவரகொண்டா  ‘குஷி திரைப்பட வெற்றிக்கு ஒரு கோடியை மக்களுடன் பகிர்ந்து கொண்டால்தான் தூக்கம் வரும் எனவும் அதற்காக 100 குடும்பங்களை தேர்ந்தெடுத்து தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசளிக்க உள்ளதாகவும்’ தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று அவர் அவர் தான் சொன்னது போன்று 100 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் ஒரு கோடி ரூபாயை வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் ‘பல கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களே செய்யாததை செய்து விட்டாரே நடிகர் விஜய் தேவர்கொண்டா’ என்று பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in