ஆட்டோ ஓட்டுனரை வீட்டிற்கு அழைத்து பாராட்டி, கெளரவப்படுத்திய கவிஞர் வைரமுத்து… என்ன காரணம் தெரியுமா?… - Cinefeeds
Connect with us

CINEMA

ஆட்டோ ஓட்டுனரை வீட்டிற்கு அழைத்து பாராட்டி, கெளரவப்படுத்திய கவிஞர் வைரமுத்து… என்ன காரணம் தெரியுமா?…

Published

on

தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற பாடல் ஆசிரியராகவும், கவிஞராகவும் வலம் வந்தவர் கவிஞர் வைரமுத்து. இவர் ஆறு முறை தேசிய விருதும், கலை மாமணி விருதும், பத்மஸ்ரீ விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கவியரசு, கவிப்பேரரசு போன்ற பட்டங்களையும் பெற்றவர். இவர் 1978ல் பாரதிராஜா அவர்களின் ‘நிழல்கள்’ திரைப்படத்தில் பாடல் ஆசிரியராக அறிமுகமானார்.

‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ என்ற பாடலே அவர் திரையுலகில் இயற்றிய முதல் பாடல். இதை தொடர்ந்து இவரது பாடல்கள் மற்றும் பாடல் வரிகள் அனைத்தும் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது . 80ஸ் தொடங்கி தற்பொழுது வரை வைரமுத்து அவர்களின் வரிகளுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கின்றனர். இவர் இயற்றிய பல பாடல்களுக்கு தேசிய விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது கவிஞர் வைரமுத்து டாக்டர் பட்டம் பெற்ற ஆட்டோ ஓட்டுநரை வீட்டிற்கு அழைத்து பாராட்டியுள்ளார். அதாவது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் லார்துராஜ். இவர் ‘கவிப்பேரரசு வைரமுத்து திரைப்பாடல்களில் புதுக்கவிதைக் கூறுகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் லார்துராஜை தனது வீட்டிற்கே அழைத்து பாராட்டி,  கெளரவப்படுத்தியுள்ளார் கவிஞர் வைரமுத்து. இது தொடர்பாக வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் வாழ்த்து ஒன்றை பதிவிட்டுள்ளார். தற்பொழுது இந்த பதிவானது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Vairamuthu (@vairamuthuoffl)