CINEMA
‘டபுள் டமாக்கா’… இரட்டைக் குழந்தைகளுக்கு தாயான ‘சந்திரலேகா’ சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட பதிவு… வாழ்த்தும் ரசிகர்கள்…

சன் டிவியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது.அதில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிந்த ஒரு சீரியல் தான் ‘சந்திரலேகா’. இந்த சீரியலில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் தான் நடிகை ஸ்வேதா பண்டேகர்.
இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஆழ்வார், இதயம், திரையரங்கம், வள்ளுவன் வாசுகி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு ஒதுங்கிய இவர் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார்.
கடந்த ஆண்டு ஸ்வேதா சன் மியூசிக் தொலைக்காட்சி தொகுப்பாளர் மால் முருகனை திருமணம் செய்தார். இந்நிலையில் சீரியல் நடிகை ஸ்வேதா கர்ப்பமாக இருந்தார். தற்பொழுது கர்ப்பமாக இருந்த ஸ்வேதாவிற்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. ஒரு குழந்தை ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை. இந்த தகவலை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்ய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு…
View this post on Instagram