CINEMA
தயாரிப்பாளர் ரவீந்தரின் ஜாமீன் மனு தள்ளுபடி… மகாலட்சுமிக்கு ஏற்பட்ட அடுத்த அதிர்ச்சி… இனி என்ன செய்ய போறாங்கன்னு தெரியலையே…

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் ரவீந்தர் சந்திரசேகரன். நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி தயாரிப்பாளர் ரவீந்திரன், சின்னத்திரை சீரியல் நடிகையான மகாலட்சுமியை திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டார். ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி இருவருக்கும் இது இரண்டாவது திருமணமே. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஏகப்பட்ட சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்து வந்தனர்.
சமீபத்தில் முதல் திருமண நாளை ஜோடியாக அவர்கள் கொண்டாடி இருந்தனர். இந்நிலையில் ஒரு மோசடி வழக்கில் ரவீந்தரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் ஒரு ப்ராஜெக்ட்டில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக 16 கோடி ருபாய் அளவுக்கு ஏமாற்றி இருப்பதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த கைது செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து அவரது மனைவி மஹாலக்ஷ்மி ஜாமீன் கூறி மனு ஒன்றை அளித்திருந்தார். தற்பொழுது இந்த ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் மஹாலக்ஷ்மி முழுவதுமாக சோகத்தில் மூழ்கியுள்ளார். இனி அடுத்து அவர் என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.