ஆதி குணசேகரன் இல்லாததால் மவுசை இழந்த ‘எதிர்நீச்சல்’ சீரியல்… வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு TRP-யை பிடிக்க போராடும் மற்ற சேனல்கள்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

ஆதி குணசேகரன் இல்லாததால் மவுசை இழந்த ‘எதிர்நீச்சல்’ சீரியல்… வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு TRP-யை பிடிக்க போராடும் மற்ற சேனல்கள்…

Published

on

எதிர்நீச்சல் சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து.இந்த சீரியலில் இவருடைய ஆதி குணசேகரன் கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்தது.  இவர் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.  இந்நிலையில், நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து ஒருவரும் மீளவில்லை.

இவருடைய மரணத்திற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தற்பொழுதும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தற்பொழுது எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. நடிகர் மாரிமுத்துவுக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி தான் ஆதி குணசேகரன் ரோலில் நடிக்கபோவதாக கூறப்பட்டு வருகிறது.

Advertisement

இந்நிலையில் ஆதி குணசேகரன் இல்லாததால் எதிர்நீச்சல் சீரியல் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. இவர் வில்லனாக இருந்தாலும் நக்கல் கலந்த நையாண்டி பேச்சும், காமெடியான தோற்றத்தாலையும் ரசிகர்கள் மனதில் குணசேகரன் கதாபாத்திரம் ஆழமாக பதிந்தது. ஆனால் தற்போது இவர் இல்லாததால் கடந்த ரெண்டு எபிசோடுமே பார்ப்பதற்கு அந்த அளவுக்கு சிறப்பாக இல்லை என்றே கூறலாம்.

ஆனால் இந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மற்ற சேனல் ரொம்பவே முனைப்புடன் இறங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் சன் டிவிக்கு அடுத்த சேனலாக இருக்கும் விஜய் டிவியில் முத்து மற்றும் மீனா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்கும் ஆசை பேவரிட் சீரியலாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து ஆகா கல்யாணம் மக்களை கவர்ந்து வருகிறது.

Advertisement

மேலும் விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 7 ஒளிபரப்பாக உள்ளதால் இனி எதிர்நீச்சல் சீரியலுக்கான மவுசு குறைந்து விடும் என கூறப்படுகிறது. காற்றுள்ள போதே தூற்றி கொள் என்பது போல தற்பொழுது மற்ற சேனல்கள் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு முன்னுக்கு வர முயற்சி செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement