LATEST NEWS
பல கோடிகளை மோசடி செய்தார் நடிகர் அதர்வா… நடந்தது என்ன?… பகீர் புகாரளித்த பிரபல தயாரிப்பாளர்…

2010ல் வெளியான ‘பாணா காத்தாடி’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் அதர்வா. இவர் மறைந்த நடிகர் முரளியின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. பாணா காத்தாடி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் ஒத்தைக்கு ஒத்த, 100, குருதி ஆட்டம், பூமராங், செம போதை ஆகாத, இமைக்கா நொடிகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்,
கணிதன், ஈட்டி, சண்டிவீரன், பரதேசி, இரும்பு குதிரை, முப்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்துள்ளார். இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘பரதேசி’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது. தற்பொழுது வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு வருகிறார்.
தற்பொழுது நடிகர் அதர்வாவின் மீது 6.10 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தயாரிப்பாளர் மதியழகன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ‘நடிகர் அதர்வா ரூபாய் 6.10 கோடி மோசடி செய்துள்ளார். அவர் நடித்துள்ள ‘செம்ம போதை ஆகாது ‘ படத்தின் விநியோகஸ்தர் உரிமையை 5 கோடி ரூபாய்க்கு நான் பெற்றுள்ளேன். ஆனால் படம் வெளியாக தாமதம் ஆனதால் எனக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்கத்தின் உத்தரவுகளை அவர் மதிப்பதில்லை. அவரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் நட்டத்திற்கு ஈடாக மற்றொரு படம் நடித்து தருவதாக கூறினார். அதனால் ரூபாய் 50 லட்சம் செலவில் மின்னல் வீரன் என்னும் படம் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதிலும் அதர்வா நடிக்காமல் ஏமாற்றினார், இதனால் எனக்கு 6.10 கோடி ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டது. மேலும் 4 ஆண்டுகளாக பணம் தராமல் ஏமாற்றி வருகிறார். அவரை அழைத்து பேசினால் அரசியல்வாதிகளை வைத்து மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். தற்பொழுது இத்தகவல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.