கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து மரக்கன்றுகளை நட்ட நடிகர் சௌந்தரராஜன்… வெளியான வீடியோ… பாராட்டும் ரசிகர்கள்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து மரக்கன்றுகளை நட்ட நடிகர் சௌந்தரராஜன்… வெளியான வீடியோ… பாராட்டும் ரசிகர்கள்…

Published

on

சுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சௌந்தரராஜா. சுந்தரபாண்டியன் படத்திற்குப்பின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ஜிகர்தண்டா’, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, தங்கரதம், தர்மதுரை, ஒரு கனவு போல, திருட்டுப்பயலே 2 உள்பட பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படத்திலும் இவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

மேலும் திரைப்படங்களை தவிர , சில குறும்படங்களிலும் நடித்து வருகிறார். நடிகர் என்பதை தாண்டி மனிதநேயம் மிக்கவராகவும் தொடர்ந்து செயல்படுபவர் சௌந்தரராஜா. ஜல்லிக்கட்டு போராட்டம், மரக்கன்றுகள் நடுதல், கருவேல மரங்கள் அழித்தல் என சமூக சேவைகள் தொடர்ந்து செய்து வருபவர். இந்நிலையில் இவருக்கு ‘க்ரீன் ஆப்பிள் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருக்கும் இளம் பிஸினெஸ் உமன், தமன்னா என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்தது.

Advertisement

திருமணம் ஆகி 4 வருடங்கள் கழித்து இவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்பொழுது இவர் ‘மண்ணுக்கும் மக்களுக்கும்’யின் 7 ஆம் ஆண்டு தொடக்க விழா அன்று மரக்கன்றுகளை கல்லூரி மாணவர்களுடன் இணைந்து நட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Soundara Raja (@soundararaja_actor)

Advertisement
Continue Reading
Advertisement