LATEST NEWS
விஜயைக் கண்டு அஞ்சிய திமுக..? ஆட்சியை கவிழ்க்க ரூ.50 முதல் 100 கோடி வரை ஆஃபர்… ஆதவ் அர்ஜுனா புகாரால் அரசியல் வட்டாரத்தில் புயல்..!!
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டு உரையாற்றினார். தவெக ஆட்சி அமைந்த இந்த 80 நாட்களில், தவெக எம்.எல்.ஏ-க்களிடம் தலா ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி வரை கொடுத்து ஆட்சியை கவிழ்க்க செந்தில் பாலாஜி தரப்பு விலை பேச முயன்றதாக அவர் குற்றம் சாட்டினார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசத் தொடங்கியவுடன் திமுகவினர் ஓடிவிட்டனர் என்றும், எதிர்காலமே இல்லாத திமுக கட்சி தவெக எம்.எல்.ஏ-க்களை விலை பேச முயன்று மாட்டிக்கொண்டதன் மூலம் அவர்களின் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும் விமர்சித்தார். மேலும், கொளத்தூர் மக்கள் ஏன் தன்னை தூக்கி எறிந்தார்கள் என்பதை மு.க.ஸ்டாலின் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று கூறினார்.
ஆட்சியில் இருந்தபோது உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி, தற்போது எதிர்க்கட்சி தலைவர் பதவி எனப் பட்டாபிஷேகம் செய்யப்படுவதாக சாடினார். முதலமைச்சர் விஜய் யாரையும் ஒருமையில் பேசியதில்லை என்றும், மு.க.ஸ்டாலினை ‘அங்கிள்’ என்று குறிப்பிட்டதற்காக அவர் வருந்தியதாகவும் தெரிவித்த ஆதவ் அர்ஜுனா, கருணாநிதி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பெண்களைக் கொச்சையாக நடத்துவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
