LATEST NEWS
“700 ரூபாய்க்கு மோமோஸ்…!” இணையத்தைக் கலக்கும் குட்டிப் பெண் அத்விகாவின் கியூட் வீடியோ..!!
மலைகளில், சால்வை போர்த்தியபடிஅமர்ந்திருக்கும் அத்விகா என்ற சுட்டிப் பெண் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ஒருவர் அவரிடம், “இங்கே என்ன செய்கிறாய்?” எனக் கேட்க, அவர் தான் மோமோஸ் விற்பதாகச் சொல்கிறார். ஒரு பிளேட் மோமோஸ் எவ்வளவு என வினவியபோது, அவர் மிகவும் அப்பாவித்தனமாக “700 ரூபாய் ” என்று பதிலளிக்கிறார். இவ்வளவு விலை அதிகமானதா எனக் கேட்கும்போது, “எங்கள் ஊரில் மோமோஸ் விலை அதிகம் தான்” என்று அவர் செல்லமாகப் பேசுவது நெட்டிசன்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது.
இந்தப் பாப்பா உண்மையிலேயே மோமோஸ் விற்கும் ஏழைச் சிறுமி என்று பலர் நினைத்த நிலையில், அதன் பின்னணியில் உள்ள உண்மை வெளிவந்துள்ளது. அத்விகா ஒரு ‘கிட் கன்டென்ட் கிரியேட்டர்’ ஆவார். அவருடன் வீடியோவில் பேசும் குரல்கள் அவருடைய தாய் மற்றும் தந்தையுடையதாகும். பொழுதுபோக்கிற்காக அவரது பெற்றோர்களால் ஜாலியாக எடுக்கப்பட்ட இந்த வீடியோவை, அவர்களே தங்களின் சமூக வலைத்தளப் பக்கத்திலும் பதிவிட்டுப் பராமரித்து வருகின்றனர்.
https://www.instagram.com/reel/DZRbGFCRrAN/?utm_source=ig_web_button_share_sheet
அத்விகாவின் இந்தச் செல்லமான பேச்சுக்கு இணையதளத்தில் அபார வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த வீடியோ இதுவரை 2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும், 9.5 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் , 6,500-க்கும் அதிகமான கமெண்டுகளையும் பெற்றுள்ளது. பயனர்கள் பலர், “இவ்வளவு அழகான பேச்சுக்கு 700 ரூபாய் என்ன, அதற்கு மேல் 600 ரூபாய் வரி சேர்த்துக் கூட கொடுக்கலாம்” என நகைச்சுவையாகப் பாராட்டி வருகின்றனர்.
