“என் மகனுடன்.. பெருமையாக!” SAC போட்ட ஒரே ஒரு ‘வைரல்’ போஸ்ட்… நெகிழும் இணையதளம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் மகனுடன்.. பெருமையாக!” SAC போட்ட ஒரே ஒரு ‘வைரல்’ போஸ்ட்… நெகிழும் இணையதளம்..!!

Published

on

என் மகனுடன்.. பெருமையாக” என்ற நெகிழ்ச்சியான கேப்சனுடன், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, இருவரும் தங்களது அலுவலகத்தில் முதன்முறையாகச் சந்தித்து எடுத்துக்கொண்ட சிறப்புமிக்க படம் இதுவாகும்.

இச்சந்திப்பின்போது, தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பைப் பரிமாறிக்கொண்ட காட்சி பார்ப்போரின் மனதை உருக்குவதாகவும், நெகிழ்ச்சியடையச் செய்வதாகவும் அமைந்துள்ளது. இப்புகைப்படத்தைக் கண்ட இணையவாசிகள், “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி” எனும் வள்ளுவனின் வாக்கிற்கு ஏற்ப, ஒரு மகனாகத் தன் தந்தைக்கு விஜய் அளித்த மிகச்சிறந்த பெருமை இதுதான் என்று பாராட்டி, இப்போட்டோவை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in