பிரபல தமிழ் நடிகைக்கு திருமணம்?….. மாப்பிள்ளை இவரா….. என் வாழ்வை பற்றி எனக்கே தெரியவில்லை….. புலம்பும் ராகுல்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல தமிழ் நடிகைக்கு திருமணம்?….. மாப்பிள்ளை இவரா….. என் வாழ்வை பற்றி எனக்கே தெரியவில்லை….. புலம்பும் ராகுல்….!!!!

Published

on

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் ராகுல் பிரீத் சிங்.  தமிழ் சினிமாவில் தடையறத் தாக்க என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதன்பிறகு தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான் என்ற திரைப்படத்திலும், அதைத் தொடர்ந்து கமலஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.

 

Advertisement

அது மட்டும் இல்லாமல் ஹிந்தியில் செம பிசியான நடிகையாக மாறியுள்ளார் ராகுல் பிரீத் சிங். நேற்று முன்தினம் தனது 32 வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது தனது காதலருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவரின் காதலர் பெயர் ஜாக்கி பக்னாணி. இவர் ஒரு தயாரிப்பாளர் ஆவார். இவருடன் ராகுல் பிரீத் சிங் டேட்டிங் செய்து வருகிறார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியானது. இதற்கு ரகுல் ப்ரீத் சிங் விளக்கம் அளித்துள்ளார். பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியுடன் ராகுல் காதலில் இருந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக ரகுலின் தம்பி அமன் ப்ரீத் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இது குறித்து ட்வீட் செய்துள்ள ரகுல் “அப்படியா சொன்னாய் அமன்? என் திருமணம் எப்போது என்று எனக்கும் சொல்லிவிடு… என் வாழ்வை பற்றி எனக்கே தெரியவில்லை” என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in