“பாலிவுட்டில் நான் நானாக இருக்க முடியவில்லை”….. வேதனையுடன் பதிவிட்ட பிரியங்கா….. என்னப்பா ஆச்சு….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பாலிவுட்டில் நான் நானாக இருக்க முடியவில்லை”….. வேதனையுடன் பதிவிட்ட பிரியங்கா….. என்னப்பா ஆச்சு….!!!!

Published

on

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை 2018 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பாலிவுட் படங்களில் நடிப்பதை குறைத்த பிரியங்கா அதன் பிறகு ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தற்போது அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்து வருகிறார்.

பிரியங்கா சோப்ரா நிக் ஜோன்ஸ் தம்பதிக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் தங்களது முதல் குழந்தையை வாடகை தாயின் மூலமாக பெற்றனர். அந்த தம்பதி தங்களது, பெண் குழந்தைக்கு மல்டி மேரி என்ற பெயர் வைத்துள்ளனர். தொடர்ந்து படங்கள், நிகழ்ச்சி கணவன் மற்றும் குழந்தை என்று பிசியாக சுற்றி வரும் பிரியங்கா சோப்ரா தற்போது ஒரு சில விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார்.

Advertisement

அதில் பாலிவுட்டில் இருக்கும் ஒவ்வொரு கணமும் கயிற்றில் நடப்பது போல் உணர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பேசிய அவர் கூறியதாவது “என்னுடைய முதல் 2 வருடங்கள் மிக மோசமாக இருந்தது. இந்த திரைத்துறையில் பல புத்திசாலிகள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். அவர்களில் பலர் போலியானவர்கள். அவர்களை நாம் சமாளித்தாக வேண்டும். உண்மையில் இங்கு நான் நானாக இருக்க முடியவில்லை என்று தான் கூற வேண்டும் என்று வேதனை உடன் பகிர்ந்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in