“அடப்பாவமே..! நொடிப் பொழுதில் சாம்பலான பயணம்… சாலையில் 25 மீட்டர் தூரம் தரதரவென சறுக்கிய பேருந்து.. நெஞ்சை நடுங்கவைக்கும் CCTV காட்சி..!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடப்பாவமே..! நொடிப் பொழுதில் சாம்பலான பயணம்… சாலையில் 25 மீட்டர் தூரம் தரதரவென சறுக்கிய பேருந்து.. நெஞ்சை நடுங்கவைக்கும் CCTV காட்சி..!”

Published

on

கேரளாவின் மலப்புரம் மாவட்டம் குட்டிப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலை 66-ல் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் பயங்கர வீதி விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. கோழிக்கோட்டிலிருந்து திருச்சூருக்குச் சென்று கொண்டிருந்த ‘டிஃபெண்டர்’ என்ற தனியார் பேருந்து, கைலாஷ் அரங்கம் அருகே அதிவேகமாக வந்தபோது திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் 25 மீட்டருக்கும் மேலாகச் சறுக்கிச் சென்று, சேவைச் சாலையில் இருந்த தடுப்பில் மோதியதோடு, ஒரு ஆட்டோ மற்றும் காரை நசுக்கிக்கொண்டு பக்கவாட்டில் கவிழ்ந்தது. இந்தத் திகிலூட்டும் காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malappuram, Keralam: CCTV footage from the site of a bus accident shows the vehicle losing control, skidding for over 25 metres, and overturning after hitting a divider on a service road. pic.twitter.com/uaIPaWTI9w— IANS (@ians_india) July 26, 2026

இந்தக் கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 26 பயணிகள் படுகாயமடைந்தனர். விபத்து நடந்ததும் உள்ளூர் மக்கள், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பேருந்தின் பாகங்களை வெட்டிப் எடுத்து, உள்ளே சிக்கியிருந்த பயணிகளை மீட்டு குட்டிப்புரம், வலஞ்சேரி மற்றும் கோட்டக்கல் மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், பேருந்தின் அதிவேகமே விபத்துக்கு முக்கியக் காரணமா அல்லது இயந்திரக் கோளாறு ஏதேனும் ஏற்பட்டதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட தகவல்களின்படி பேருந்து அதிவேகத்தில் சென்றதே விபத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளதாகக் கேரள போக்குவரத்து அமைச்சர் சி.ஓ. ஜான் தெரிவித்துள்ளார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற்றும் காவல் துறையினர் மேல்நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in