LATEST NEWS
BREAKING: தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு… சவரனுக்கு ரூ.560 அதிகரித்து புதிய வரலாற்று உச்சம்..!!
தமிழகத்தில் வாரத்தின் முதல் நாளான இன்று, ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து சவரன் 1 லட்சத்து 6 ஆயிரத்தைத் தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஓரளவுக்குக் கட்டுக்குள் இருந்த தங்கம் விலை, இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 ஆக மளமளவென அதிகரித்துள்ளது. இதன்படி, நேற்று ஒரு சவரன் ரூ.1,06,400-க்கு விற்பனையான 22 கேரட் ஆபரணத் தங்கம், இன்று ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,960 என்ற புதிய வரலாற்று விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சவரன் விலையைப் போலவே ஒரு கிராம் தங்கத்தின் விலையும் இன்று கணிசமாக உயர்ந்து நுகர்வோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.13,300-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,370 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் காரணிகளால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதே, உள்நாட்டுச் சந்தையில் இந்த திடீர் விலை உயர்வுக்குக் முக்கியக் காரணம் என்று தங்கம் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
