LATEST NEWS
“அடப்பாவமே…! சொந்த ஊருக்கு வந்த இளைஞருக்கு நேர்ந்த கொடுமை!.. சாக்கடையில் காத்திருந்த எமன்… உறைந்துபோக வைக்கும் பின்னணி..!!
அமெரிக்காவின் இந்தியானா பல்கலைக்கழகக் கெல்லி வணிகப் பள்ளியில் பயின்று வந்த 20 வயது மாணவர் யஷ்வேந்திர சிங், விடுமுறையைக் கழிப்பதற்காகக் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு வந்துள்ளார். இந்திய ராணுவ பிரிகேடியரின் மகனான இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய்வழி தாத்தாவைக் கவனிப்பதற்காக டெல்லி ஹவுஸ் காஸில் உள்ள ராணுவ விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்துள்ளார். சம்பவத்தன்று காலை சுமார் 6 மணியளவில், தெற்கு டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் தனது தோழியின் காரை ஓட்டிச் சென்றபோது, மழை நீரால் சேறும் சகதியுமாக இருந்த சாலையில் கார் எதிர்பாராதவிதமாகச் சறுக்கித் திறந்தவெளி வடிகாலில் கவிழ்ந்தது. மீட்புக் குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்; அதிர்ஷ்டவசமாக அவருடன் இருந்த தோழி உயிர்தப்பினார்.
A national-level basketball player, the son of an Army officer, dies as his car falls into an open drain in Delhi: Report pic.twitter.com/W8Oab5hSov— 🚨Indian Gems (@IndianGems_) July 26, 2026
இந்தத் துயரச் சம்பவம் டெல்லியின் பராமரிக்கப்படாத திறந்தவெளி சாக்கடைகள் மற்றும் சீர்குலைந்துள்ள உள்கட்டமைப்பு மீதான மக்களின் கடும் கோபத்தை மீண்டும் தூண்டியுள்ளது. “இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ‘ஃபைனல் டெஸ்டினேஷன்’ திரைப்படம் போல அச்சத்திலேயே வாழ வேண்டியுள்ளது; இதற்குக் காரணம் அதிகாரிகளின் ஊழலும் பொறுப்பற்றத் தன்மையும்தான்” என்றும், “டெல்லியின் முக்கியப் பகுதிகளில் உள்ள பெரிய திறந்த சாக்கடைகளைக் கான்கிரீட் பலகைகளால் மூடுவது அவ்வளவு கடினமான காரியமா?” என்றும் சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் தங்களின் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். நிர்வாகத்தின் அலட்சியத்தால் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு விலைமதிப்பற்ற இளம் உயிர் பறிபோயுள்ளதாக இணையத்தில் கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
