LATEST NEWS
‘ஒருதலை ராகம்’ படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ரூபா இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா? …

ஒருதலை ராகம் இது இளையராஜா இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரு இசை காவியம். இளையராஜா இல்லாமலும் ஒரு படத்தை வெற்றிப்படமாக எடுக்க முடியும் என்று அந்தக் காலகட்டத்தில் நிரூபித்த ஒரே பன்முக கலைஞர் டி.ராஜேந்தர் தான். அதுமட்டுமல்லாமல் கஷ்டங்களை கூட கண்ணியமாக அதே நேரத்தில் காவியமாக எடுக்க முடியும் என்று நிரூபித்த படம் ஒரு தலை ராகம்.
சோகங்களை கூட காவியமாக காட்டியது இந்தப் படம். இத்திரைப்படத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகை ரூபா. தமிழ் கலாச்சாரப்படி புடவை கட்டிக்கொண்டு, அன்று நடிகை ரூபா படம் முழுவதும் வருவது தாய்மார்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இது ஒரு தலை ராகம் டிசைன் என்று ஜவுளிக்கடைகளில் ஏராளமான புடவைகள் விற்றுத் தீர்ந்தன. அந்த அளவு இந்தப் படம் தமிழர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த படம் மாபெரும் வெற்றிபெற்றாலும் இதற்கு பின்னர் தமிழில் இவருக்கு பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. ஒருதலை ராகம் படத்திற்கு பின்னர் தமிழில் ஒரு இரண்டு ஆண்டுகளில் பின்னர் படங்கள் நடித்தார். 1980-82 ஆகிய இந்த இரண்டு ஆண்டில் மட்டும் 15கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் பின்னர் 8 ஆண்டு கழித்து பாட்டுக்கு நான் அடிமை படத்தில் ராமராஜன் தங்கையாக நடித்தார். அதன் பின்னர் தமிழில் இவரால் ஜொலிக்க முடியவில்லை.
ஆனால் கன்னட சினிமாவில் பல படங்களில் நடித்தார். இவர் நடிகை என்பதை தாண்டி சிறந்த டான்சரும் கூட கன்னட சினிமாவில் பல படங்களில் பல பாடல்களில் செம குத்தாட்டம் போட்டு இருக்கிறார். கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலும் நடித்துள்ளார். தற்பொழுது நடிகை ரூபாவின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.