LATEST NEWS
பேட்டியின் நடுவே நடிகர் மாரிமுத்துவின் மறைவை கேட்டு கண் கலங்கிய நடிகர் விஷால்… அடுத்து என்ன நடந்ததுதெரியுமா?…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் விஷால். தற்பொழுது விஷால் மற்றும் SJ.சூர்யா இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் விஷால் மற்றும் SJ.சூர்யா உடன் இணைந்து ரிது வர்மா, இயக்குனர் செல்வராகவன், புஷ்பா படத்தில் மிரட்டலாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி இன்னும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
தயாரிப்பாளர் வினோத்குமார் தயாரிக்க, 1960களில் நடைபெறும் கதை களத்தை மையமாக கொண்ட கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகி இருக்கிறது. இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.தற்பொழுது இத்திரைப்படத்தின் டப்பிங் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது மார்க் ஆண்டனி திரைப்படம் குறித்து பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார் நடிகர் விஷால். அந்த பேட்டியின் இடையில் திடீரென நடிகர் மாரிமுத்துவின் மறைவு செய்தி நடிகர் விஷாலுக்கு சொல்லப்பட்டது. உடனே ஷாக் ஆன நடிகர் விஷால் கண் கலங்கி, அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று அவருக்காக ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினர். மேலும் அந்த பேட்டியில் நடிகர் மாரிமுத்துவின் மறைவு குறித்தும் , தனக்கு அவர் எவ்வளவு நெருக்கம் என்பது குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். இதோ அந்த வீடியோ…
https://www.youtube.com/watch?v=kNwkbeGu36o