நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா?… இணையத்தில் வைரலாகும் திருமண நிச்சயதார்த்த வீடியோ… - Cinefeeds
Connect with us

CINEMA

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா?… இணையத்தில் வைரலாகும் திருமண நிச்சயதார்த்த வீடியோ…

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ‘மாமன்னன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கடைசி திரைப்படமாக மாமன்னன் திரைப்படம் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியுடன் சைரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இது மட்டுமின்றி ரிவால்வர் ரீட்டா, ரகுநாதா போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவி உடன் போலோ சங்கர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி நடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி அடிக்கடி காதல் கிசுகிசுக்களும்,திருமணம் குறித்த வதந்திகளும் பரவிக் கொண்டுதான் வருகிறது.

அந்தவகையில் தற்பொழுது இவர் ‘போலோ ஷங்கர்’ திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் மணப்பெண் கோலத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை ரசிகர்கள்  ‘ நடிகை கீர்த்தி சுரேஷுக்கு  திருமணம் என கூறி தவறுதலாக புரிந்து கொண்டு வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…