LATEST NEWS
அடுத்த ‘எதிர்நீச்சல் ஆதி குணசேகரன்’ யார் தெரியுமா?… இயக்குனரே கூறிய பரபரப்பு தகவல் இதோ…

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வந்தவர் நடிகர் மாரிமுத்து. எதிர்நீச்சல் சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான இவர் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். எதிர்நீச்சல் சீரியலில் இவருடைய ஆதி குணசேகரன் கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக ‘ஏமா ஏய்’ என்று இவர் கூறும் வசனம் மீம் ஆக மாறியது.
நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் ’கண்ணும் கண்ணும், புலிவால்’ என இரு திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் கடந்த 1994ஆம் ஆண்டு பாக்கியலட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்ட மாரிமுத்துவிற்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில், நடிகர் மாரிமுத்து நேற்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து ஒருவரும் மீளவில்லை. 57 வயதாகும் இவருடைய மரணத்திற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தற்பொழுதும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தற்பொழுது எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
ஆனால் ரசிகர்கள் எத்தனை பேர் வந்தாலும் அவருக்கு ஈடாக மாட்டார்கள் என்று வேதனையுடன் கூறி வருகின்றனர். ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாகவும் அவரால் தான் மாரிமுத்து இடத்தை நிரப்ப முடியும் என்று நினைக்கும் படியான ஒரு பிரபலமும் இருக்கிறார். அவர் தான் எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி. பிசியான நடிகராக இருக்கும் இவர் மாரிமுத்துவுக்காக இந்த கதாபாத்திரத்தை நிச்சயம் ஏற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.