LATEST NEWS
குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய நடிகர் அஜித்….! வைரலாகும் புகைப்படம்…..!!!
நடிகர் அஜித் தனது மனைவி மகளுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித் ரசிகர்களால் தலை என்று அழைக்கப்பட்டவர் தற்போது ஏகே என்று அழைக்கப்படுகின்றார். இவர் ஹச். வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் .இந்த திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அஜித் தாய்லாந்தில் துணிவு சூட்டிங் முடித்துவிட்டு அங்கேயே பைக் ட்ரிக் சென்றதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது மனைவி ஷாலினி உடன் இவர் தீபாவளி கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது. இந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்கள்.
