CINEMA
பொது இடத்தில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு நடந்த மோசமான செயல்…. நடந்தது என்ன…??

நடிகை ஷில்பா ஷெட்டி தமிழ், இந்தி, குஜராத்தி, தெலுங்கு என பலமொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் கோலிவுட்டில் விஜய் நடிப்பில் வெளியான குஷி என்ற படத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். அதன் பிறகு ரோமியோ படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்த தற்போது 49 வயதை அடைந்த ஷில்பா ஷெட்டி இன்றும் இளம் நடிகைகளுக்கு போட்டியாக தன்னுடைய அழகை பராமரித்து வருகிறார்.
இந்த நிலையில் ஷில்பா ஷெட்டி சென்ற நிகழ்ச்சி ஒன்றில் அவருடைய அவருக்கு தர்ம சங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஹாலிவுட் முன்னணி நடிகராக இருக்கும் ரிச்சர்ட் கேரா இந்தியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார் . அந்த சமயத்தில் அவரோடு ஷில்பா ஷெட்டியும் அறிமுகமானார்.
அந்த நடிகர் முதலில் கைகளில் முத்தமிட்டு தொடர்ந்து ஷில்பா ஷெட்டியின் கன்னத்தில் அடுத்தடுத்து முத்தங்களை கொடுத்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். நடிகரின் இந்த செயலால் அதிர்ச்சிக்குள்ளான ஷில்பா ஷெட்டி அந்த நிலைமையை சாமர்த்தியமாக சமாளித்துவிட்டு நிகழ்ச்சியை முடித்துள்ளார். இந்த சம்பவத்தில் ரசிகர்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.